என் மனம் கவர்ந்த மன்னன் ! ! !
மருதுபாண்டியர் வரலாறு:
மருதுபாண்டியர்
பிறப்பு:
தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் கிரமத்தில் உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னத்தாளுக்கும்,1748ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி மகனாக பிறந்தார் பெரிய மருது. 5 ஆண்டுகள் கழித்து 1753ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி சின்ன மருது பிறந்தார்.
பெரிய மருது, வெள்ளை நிறத்தில் இருந்தார் ஆகவே அவர் வெள்ளை மருது பாண்டியர் என அழைகபட்டர்.
சின்ன மருது, உயரத்தில் பெரிய மருதுவைகாடிளும் சற்று குறைவாக இருந்தார் ஆகவே அவர் சின்ன மருது என அழைகபட்டர்.
தமிழ்நாட்டில்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் கிரமத்தில் உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னத்தாளுக்கும்,1748ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி மகனாக பிறந்தார் பெரிய மருது. 5 ஆண்டுகள் கழித்து 1753ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி சின்ன மருது பிறந்தார்.
பெரிய மருது, வெள்ளை நிறத்தில் இருந்தார் ஆகவே அவர் வெள்ளை மருது பாண்டியர் என அழைகபட்டர்.
சின்ன மருது, உயரத்தில் பெரிய மருதுவைகாடிளும் சற்று குறைவாக இருந்தார் ஆகவே அவர் சின்ன மருது என அழைகபட்டர்.
விடுதலை போராட்டம்:
விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களையே காணிக்கையாக்கிய இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் மருது பாண்டியர்களை நாம் மறக்க இயலாது. 200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களை, வெளியேற்ற முறைப்படி போர் செய்தனர் (ஜூன் 1801).
தென்னிந்தியாவில் அனைத்து பிரிடிஷ் எதிர்ப்பு ஆயிதப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர்கள் சிவகங்கைச் சீமையின் மருதுபாண்டியர்சகோதரர்கள். அன்று நம் நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள், பாளையகார தலைவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி வெள்ளையர்கள் நயவஞ்சகமாக சூழ்ச்சிகள்மூலம் நம் நாட்டைப் பகுதி, பகுதியாய் ஆக்கிரமிப்பு செய்து நம் மன்னர்களையும் மக்களையும் மிகக் கேவலமாய் நடத்தினர். வாணிபம் செய்து பிழைக்க வந்த இந்த வெள்ளையார்கள் ஆக்கிரமிப்பில், ஆட்சியில் நம் மக்களின் இழிவான, அடிமை வாழ்வைக் கண்டு கொதித்தெழுந்தனர் மருதுபாண்டியர். இதன்மூலம் இந்திய சுதந்திரப் போராட்டங்களுக்கு 1801ஆம் ஆண்டிலேயே வழிவகுத்திட்ட முன்னோடிகள் மருதுபாண்டிய சகோதரர்கள் ஆவர்.
போர்பயிற்சி
பாண்டியர் நாட்டம்:
இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகில் உள்ள நரிக்குடி முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த மொக்க பழநி என்ற உடையார் சேர்வை தம் மக்களுக்கு முறையே போர்ப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து அவர்களை தீரமிக்க வீரர்களாக்கினர். மருதிருவரின் துணிச்சலான செயல்களைப் பாராட்டி முத்து விஜய ரெகுநாத சேதுபதி பாண்டியன் என்ற சிறப்பு பட்டத்தை அவர்களுக்குச் சூட்டினார்.
தமிழ்ச்சங்கம்:
மருதுபாண்டியர் குறுகியகால ஆட்சியில் அவர்கள் அரசவையில் 21 தமிழ்ப்புலவர்கள் இருந்ததாகவும், மருதரசரசர்கள் புகழ்பாடும் மயூரகிரிக் கோவை ஆசிரியர் காந்தமுத்துப் புலவர், முத்து வேலுக் கவிராயர் போன்ற பல தமிழ் வித்துவான்கள் இருந்தார்கள் என்பதையும், அவர்களுக்கு மருதரசன் வழங்கிய பல கிராமங்களை நிலக் கொடைகள் போன்ற விபரங்களை வரலாற்று தூண்களில் காணமுடிகிறது.
ஆன்மீகப் பற்று ஆலயத் திருப்பணிகள்:
பெரிய மருதுபாண்டியர் தெய்வ பக்தி உடையவர். தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆலயங்களில் மட்டுமல்ல மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் உள்ள பல ஆலயங்களின் திருப்பணிகளையும், சிறப்புறச் செய்து அக்கோயில்களின் நிர்வாக அன்றாட பூஜைகள், திருவிளக்குகள் எரிய எண்ணைக்கான மற்றும் கோயில் பராமரிப்பு செலவுக்கான மேற்படி ஆலயங்களுக்கு ராஜமான்யமாகப் பல கிராமங்களை மருதுபாண்டியர் நலக்கோடையாகத் தாமிர பட்டயங்கள்மூலம் அளித்துள்ளார்கள்.
குன்றக்குடி, திருப்புத்தூர், காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை, மதுரை, திருமோகூர், திருப்பாசேத்தி, திருப்புல்லாணி, திருக்கோட்டியூர் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்கள் மருதுபாண்டியர் செய்த திருப்பணிகளுக்கு ஓர் எடுத்துக் காட்டு.
மருதுபாண்டியரின் ஆட்சிகாலத்திலேயே தேசிய ஒருமைப்பாட்டையும் மதச்சார்பின்மையும் கடைபிடித்து செயல்படுத்தினார்.
பசும்பொன் மாவட்டம் சருகணி புதிய மேரி மாதா சர்ச் மற்றும் இஸ்லாமிய நரிக்குடி பள்ளிவாசல், பெரிய கோட்டை பள்ளிவாசல் பாசிப்பட்டினர் தர்கா, திருப்புத்தூர் காசியா ஒளி தர்க்கா போன்றவற்றை நிறுவியதன்மூலம் இவர்களின் மதச்சார்பின்மை வெளிப்படுகிறது.
நாட்டுப் பணிகள்:
கி.பி. 1780ஆம் ஆண்டுக்குப் பின் சிவகங்கைப் பாளையத்தின் முழுப் பொறுப்பினையும் ஏற்ற மருது சகோதரர்கள் அரசு நிர்வாகத்தைத் திறம்பட நடத்தினர். பொறுப்பேற்ற தொடக்க ஆண்டுகளில் அவர்கள் சில போர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியும் அதற்குக் காரணம் வேலுநாச்சியாரின் மகள் வெள்ளை நாச்சியாரை தனக்குத் திருமணம் செய்து கொடுத்தால் முன்பு சேது மண்டலம் இருந்ததைப் போல் பிரிந்த நாட்டை இத்திருமணத்தின் மூலம் ஒன்று சேர்த்துவிடலாமே என்ற எண்ணத்தில் சேதுபதி எண்ணினார். அதற்கு மருது சகோதரர்கள் இடம் கொடுக்காமல் தங்களின் அன்பிற்குப் பாத்தியமான பெரிய வெங்கம் உடையனத் தேவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். அதன் பொருட்டு மருதுபாண்டியர் மேல் முத்துராமலிங்க சேதுபதிக்கு எல்லையில்லாக் கோபம்! அடுத்து ஆற்காட்டு நவாப் முகமது அலியும் புதுக்கோட்டை மன்னர் இராயரகுநாதத் தொண்டைமானும் அவ்வப்போது சிவகங்கை மீது படையெடுத்தனர். இத்தொல்லை முதல் பத்தாண்டுகள் முடிய நீடித்தது. பத்தாண்டு காலம் ஓரளவு மருது சகோதரர்கள் அமைதியாக ஆட்சி நடத்திய காலமாகும். அவர்கள் தங்கள் ஆற்றலை நாட்டின் வளர்ச்சி பணிகளில் ஈடுபடுத்தினர். அவர்கள் காலத்தில் கட்டிடக்கலை குறிப்பாகக் கேயிற்களை செழிப்புற்றது. இந்து கோயில்கள் பலவற்றைக் கட்டினர். இவற்றிற்கு வேண்டிய அளவு அறக்கொடைகளை நல்கினர். இவ்வாறே கிறிஸ்துவ ஆலயத்துக்கும் இஸ்லாமிய மசூதிக்கும் அற்கொடைகள் நிறுவினர். மக்களின் நன்மைக்காக அவர்கள் ஊரணிகளையும், குளங்களையும், கிணறுகளையும் வெட்டினர். இன்றளவும் சில கிராமங்களில் பாண்டியன் கிணறு என்று சொல்கிறார்கள். அத்தோடு நாட்டின் பாதுகாப்புக் கருதி கோட்டைகளையும் கட்டினர். பழைய அரண்மனைகளை புதுப்பித்தனர். நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு அவர் ஆற்றிய பணிகளை சிறிது பார்ப்போம். இராமநாதபுரம் மாவட்டத்தில் முகவைக்கு 6 கல் மைல் தொலைவில் அழயான் குளம் என்று ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவில் மருது சகோதரர்களால் கட்டப்பட்டதாகும். மருது சகோதரர்களின் கோயில் பணியில் மிகவும் குறிப்பிடத்தக்கது காளையார் கோயில் பணியாகும். இக்கோயில் பழைய கோபுரத்தின் அருகில் 151 அடி உயரத்தில் ஒரு புதிய ராஜ கோபுரம் கட்டிச் சிறப்பித்துள்ளனர். அக்கோபுரத்தைக் கட்டுவதற்கு மானாமதுரையிலிருந்து செங்கற்கள் கொண்டுவரப்பட்டன. அக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியும். மானாமதுரையில், கருமலை என்ற இடத்தில் செங்கற்கள் எடுத்து மருது சகோதரர்கள் அக்கோபுரம் கட்டியதன் சிறப்பையும் அருமைப் பாட்டையும் ஒரு நாட்டுப்புறப் பாடல் பின்வருமாறு கூறுகிறது.
மக்களுக்கு சேவை:
நரிக்குடியில் சத்திரம், காளையார் கோயில் சத்திரம், குன்றக்குடி சத்திரம், திருப்பத்தூர் சத்திரம், பாம்பனில் சத்திரம், அழகன் அலையான் குளத்தில் சத்திரம், சூடியூரில் சத்திரம், மானாமதுரையில் சத்திரம். அதன் அருகில் உள்ள முத்தனேந்தலில் சத்திரம் எனப் பற்பலச் சத்திரங்களை அமைத்து ஏழை எளிய மக்களுக்கு மருதுபாண்டியர்கள் செய்த தொண்டு வியந்து போற்றத்தக்கது. மருதுபாண்டியர்கள் தங்கள் தாய் - தந்தையர் பெயரில் அமைத்த குளமும் - ஊரணியும் இன்றும் நல்ல நிலையில் இருப்பது அவர்களது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவைகள் பொன்னாத்தாள் குளம் - உடையார் சேர்வை ஊரணி, ஆத்தாகுளம் ஆவன ஆகும்.
சமய ஒற்றுமை:
மருதுசகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர்.
இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.
மானாமதுரை சோமேசர் கோயிலுக்கு கோபுரம் கட்டி தேரும் செய்தளித்துள்ளர். மருது பாண்டியர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இத்திருக்கோயிலின் பெருமை பற்றிப் சிவகங்கைக் கவிஞர் வேதாந்தம் சுப்பிரமணியம் வானர வீர மதுரைப் புராணத்தை பாடியுள்ளார். இந்நூலின் இறுதி பாடல் மருது சகோதரர்களை “யதுகுல மருது பூபன் மைந்தர்கள் ” என்று குறிப்பிடுகிறது.
இளையவரான “சின்ன மருது” அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.
திருப்புத்தூரில் அடக்கம்:
மருது சகோதரர்கள் உடல்கள் திருப்புத்தூர் சிங்காரத் தோப்பு என்ற இடத்தில்அடக்கம் செய்யப்படது, மருது சகோதரர்களின் குடும்பம் அங்கேயே தங்கி, அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பாதுகாத்து, பொங்கலிட்டு வழிபட்டு வந்தனர். வழிவழியாய் பரம்பரையாக மருபாண்டியர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டவிபரங்களை விசாரணை நடத்தி விபரங்களை அறிவிக்குமாறு தமிழ்நாடு அரிசின் தலைமை செயலர் உத்திரவின்படி 1977ல் இராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் திருப்புத்தூர் தாசில்தார் அவர்களுடன் இடத்தைப் பார்வையிட்டு விசாரணைகள் செய்து மருதுபாண்டிய சகோதரர்கள் உடல்கள் திருப்புத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கான அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின்படி தமிழக அரசின் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் மருது சகோதரர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிவகங்கை மன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பவும்,அந்த மண்டபத்தில் மதுபாண்டியர் உருவச்சிலைகளை அமைத்திடம் 1990 ஜூன் 16ல் அரசாணை பிறப்பித்தார். அதன் பிரகாரம் அதிழக அரசு திருப்புத்தூரில் நினைவு மண்டபம் கட்டி மருதிருவர் சிலைகளையும் நிறுவியது. 24.10.1997ல் அரசு சார்பில் முதன் முறையாக மாலைகள் அணிவிக்கப்பட்டது.
மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்புத்தூரில் அவர்களது நினைவாக தமிழக அரசால் 200வது நூற்றாண்டை முன்னிட்டுதான் சுவிடீஸ் மருத்துமனையயில் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
மருத்துவமனை:
இது தமிழ் நாட்டிலுள்ள தலைசிறந்த மருத்துவமனைகளுள் ஒன்று. 1909 டாக்டர் கூகல்பர்க் என்ற சுவீடன் நாட்டு டாக்டர் இங்கு கண் ஆஸ்பத்திரி ஏற்படுத்தினார். கண் மருத்துவத்துறையில் அவர் ஒரு நிபுணர். அவரிடம் பயின்ற பலர் தமிழ்நாடெங்கும் கண் மருத்துவத்தில் புகழும் பொருளும் பெற்றிருந்தனர். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சென்னையில் ஏற்பட்ட முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டாக்டர் குருபாதம் இங்கு பணி புரிந்தவரே. கண் மருத்துவம் தவிர பிற துறைகளிலும் இம்மருத்துவமனை விரிந்திருந்தது. 300 படுக்கைகள் இருந்தன. மருத்துவமனை உள்ள இடம் வரலாறு உடையது. மருது சமாதிக்கு மக்கள் வாரந்தோறும் சென்று வழிபட்டு, விடுதலை உணர்வும் சிவகங்கைச் சீமையின் உரிமை மருது வழியினருக்கே மீண்டும் வழங்கப் பெற வேண்டுமென்ற எண்ணமும் பெற்றனர். இவற்றைத் தடுக்க, மருதுவின் உடமையைச் சட்ட விரோதமாகப் பெற்ற சிவகங்கை அரசர் சமாதியைச் சுற்றிய 17.5 ஏக்கர் நிலத்தை மருத்துவமனைக்கு வழங்கினார்.
இம்மருத்துவமனையில் ஆபரேன் தியேட்டர் இருந்தது. சுவிடீஷ் டாக்டர்களும் பணிபுரிந்தனர். நர்ஸ் தொழிலுக்குப் பயிற்சி தரும் கல்வி நிலையமும் இயங்கிவந்தது. இன்றும் பார்வையற்றோர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையமும் இயங்கி வருகின்றன. ஏழை எளியவர்களுக்கு இம்மருத்துவமனை செய்த பணி பாராட்டுக்குரியதாக இருந்தது. காந்தியடிகள் 1927ல் வருகை புரிந்து இம்மருத்துவமனையின் தொண்டினைப் போற்றியது குறிப்பிடத்தக்கது. இப்போது இம்மருத்துவமனை இயங்காமல் இருந்து வருகிறது. தமிழ அரசின் பார்வை இம்மருத்துவமனைக்கு உயிரூட்டுமா?
நினைவுத் தபால் தலை:
மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இவர்களது நினைவுத் தபால் தலையை இந்தியா அஞ்சல் துறை 2004ஆம் ஆண்டு அக்டோபர் 23இல் மதுரையிலும்,சென்னையிலும் வெளியிடப்படத்து.
நமது மத்திய அரசு NCERT மூலம் வெளியிட்டுள்ள விடுதலைப் போர் குறித்த விரிவான நூலில் மருது சகோதரர்கள், பாளையக்காரர் புரட்சியின தலைவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மாபெரும் விடுதலைப் போராட்ட வரலாற்றுத் தொகுப்பில் ஆரம்பகால புரட்சியின் தலைவர்களாகத் தமிழகம் முழுவதும் அங்கீகரித்திருப்பது மருது சகோதரர் இருவரை மட்டுமே!
மருது சகோதரர்கள்தான் முதன்முதலாக வெள்ளையனுக்கு எதிராகப் போரை ஒருங்கிணைந்து, ஓர் இயக்கமாக்கி வெள்ளையனை வெளியேறச் சொல்லி முறைப்படி பிரகடனம் வெளியிட்டு, வரலாற்றில் சிறப்பம்சம் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.
மருது சகோதரர்கள் இருவருமே மன்னர்களாக விளங்கினர். இருவருக்கும் தனித்தனி அரண்மனைகள் இருந்திருக்கின்றன.
பெரிய மருதுவுக்கு இராக்காதத்தாள், கருப்பாயி ஆத்தாள், பொன்னாத்தாள், ஆனந்தாயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள் ஆகிய ஐந்து மனைவிகள்.
இராக்காத்தாள் மூலம் பிறந்தவர்கள் குடைக்காதுடையார், முத்துச்சாமி , உடையனன், முள்ளிக் கட்டிச்சாமி.
கருப்பாயி ஆத்தாள் மூலம் கறுத்த தம்பி என்ற கருத்துடையாள் என்ற கறுத்த பாண்டியன், காந்தேரி ஆத்தாள், மருதாத்தாள்.
பொன்னாத்தாளுக்கு பிள்ளை ஏதும் கிடையாது.
ஆனந்தாயி ஆத்தாளுக்கு மகள் பிறந்து இறந்துவிட்டதாகத் தெரிகிறது.
நாயக்கர் சமூகத்தினைச் சேர்ந்த மீனாட்சி ஆத்தாளுக்குத் தங்கம் என்ற மகள் உண்டு.
சின்னமருதுவுக்கு வீராயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள், வைராத்தாள் என்ற மூன்று மனைவிகள்.
வீராயி ஆத்தாள்மூலம் சிவந்த தம்பி, சிவஞானம், முத்துவடுகு என் துரைச்சாமி.
2வது 3வது மனைவி பிள்ளைகள் விபரம் தெரியவில்லை.
சிவகங்கைச் சீமையில் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் சத்திரம் கட்டியிருக்கிறார்கள். திருப்புத்தூரில் கட்டியிருந்த சத்திரம் பிற்காலத்தில் உயர்நிலைப்பள்ளியாக செயல்பட அனுமதிக்கப்பட்டது.
திருப்புத்தூரில் திருத்தளி நாதர் கோயிலுக்குள் இரண்டடடடடாம் திருச்சுற்றின் வடக்கிள் பைரவர் கோயில் மேற்கு நோக்கியுள்ளது. இப்கோயில் முன்மண்டபத்தை அடுத்துள்ள மண்டபம் மருதுசகோதரர்களால் கட்டப்பட்டது. அங்கு கோயில் கொண்டுள்ள சிலையின் மார்பில் மருதுசேர்வை என்ற பெயர் பொறித்த பதக்கம் உள்ளது.
மேலும், சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில், குன்றக்குடி, சிவகங்கை, வாணியங்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி, சிங்கம்புணரி, உஞ்சனை, ஏரியூர், நாச்சியாபுரம், கோவிலூர்,ஒழுகமங்கலம், மறைநாடு, சிறுவயல் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் மருதுசகோதரர்கள் காலத்தில் கட்டப்பட்டும், சீரமைக்கப்பட்டவையும் ஆகும்.
திருப்புத்தூர் சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, சமஸ்கான் சகோப் தர்ஹா, சமஸ்கான் புதுக்கோட்டை ரோடு, கான்பர் ஒலி தர்ஹா, நரிக்குடி ஜமால் ஒலி தர்ஹா, பாசிப்பட்டணம் நயினா முஹம்மது ஒலியுல்லா தர்ஹா, காரா ஊருணிக்கருகே அடங்கியுள்ள இரசூல் சாயபு (இவர் அடங்கியுள்ள இடத்தில் மசூதி) மதுரை கீழவெளிவீதியில் சப்பாணி கோயில், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சின்னா நூர்தின் பள்ளிவாசல் ஆகியவற்றிற்கு அவர்களின் மேற்கொண்ட நன்மதிப்பால் இடமும் பொருளுமே தானமாக மருதுசகோதரர்கள் வழங்கி மதச்சார்பின்மையை நிலைநாட்டியுள்ளார்கள்.
Nice work super guys keep it up 👌👌👌
ReplyDeleteThank you
Delete������
ReplyDelete👍👌
Nice
ReplyDeleteThank You Sir
Delete